மாணிக்கவாசகர் காலம் – குழப்பமும் தெளிவும்

மாணிக்கவாசகரின் காலம் குறித்து ஆய்வாளர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் முன்பு நிலவி வந்தன. கிபி 3-5 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்திருக்கலாம் என ஆரம்ப காலத்தில் சிலர் முடிவுக்கு வந்தாலும் பின்வந்த ஆய்வாளர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. அதற்கு பிரதானமான காரணம், நாயன்மார்களை முதன்முதலாக வரிசைப்படுத்திய கிபி 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகரின் பெயரை குறிப்பிடவில்லை என்பதும், கிபி 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் மாணிக்கவாசகர் இடம்பெறாததும் தான். இதனால் பலரும் […]

Continue Reading...

சேக்கிழார் காலம் – ஓர் ஆராய்ச்சி!

முதலில் சேக்கிழார் மரபினர் குறித்தும் பெரியபுராணக் காலத்தில் அரசுபுரிந்த சோழ மன்னனை குறித்தும் பார்ப்போம். சேக்கிழார் என்பது ஒரு குடிப்பெயர். அக்குடியில் இருந்து பலர் சோழ அரசாட்சியில் பங்குகொண்டிருந்தனர் என்பதற்கு பல கல்வெட்டு சான்றுகள் கிடைக்கின்றன. கிபி954-இல் கண்டராதித்த சோழனின் உடையார்குடி கல்வெட்டில் ‘சேக்கிழான்’ எனும் பெயர் முதன்முதலாக குறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. பின் இதே நூற்றாண்டில் திருச்சோற்றுத்துறையில் ஒரு கல்வெட்டும் இதற்கடுத்த நூற்றாண்டில் திருக்கழுக்குன்றத்திலும் ‘சேக்கிழான்’ எனும் பெயர் தாங்கிய கல்வெட்டு கிடைக்கின்றன. இப்படியாக […]

Continue Reading...

“நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரம்!

பொதுவாக ‘நமசிவாய’ எனும் சொல் வடமொழி என்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக சொல்லை பிரித்துக்கொண்டு பொருள் கூறுவர். ‘நம’ எனும் சொல் வடமொழியில் ‘வணக்கம்’ எனும் பொருள் தரும் என்பர். கிருஷ்ண யஜூர் வேதத்தின் ஶ்ரீருத்ரத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு வரி வரும். नमः शिवाय च शिवतराय च Transliterate: namaḥ: śivāya ca śivatarāya ca இங்கு வரும் ‘நம:சிவாய‘ எனும் சொல்லானது ‘மங்களகரமானவனுக்கு வணக்கம்‘ என்ற பொருளை தருகிறது. அதாவது வடமொழியில் ‘சிவ’ என்றால் […]

Continue Reading...

கார்த்திகை தீபமும் தமிழர் தொன்மையும்!

தமிழர்கள் இயற்கையில் இறைவனைக் கண்ட பெரும் சிறப்பினைக் கொண்டவர்கள். எனவே தான் தமிழரின் சமய மரபு வானாய், மண்ணாய், வளியாய், ஒளியாய், ஊனாய், உயிராய், உண்மையுமாய், இன்மையுமாய் எங்கும் நிறைந்திருப்பவன் இறைவனே என்பதாய் அமைந்தது. அத்தகைய மரபின் அடிப்படையிலே ஒரு மாதத்தில் உள்ள நாட்களை வானில் தோன்றிய 27 நாள்மீன்களின் (விண்மீன்) பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்விண்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை என்பதாகும். ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாள் சிறப்பிற்குரிய நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு […]

Continue Reading...

தீபாவளி – ஒரு பண்டிகையும் பல்வேறு காரணிகளும் மரபுகளும்!

தீபாவளி அல்லது தீப ஒளி அல்லது தீப ஆவளி என பல்வேறு வகையாக இதனை சீர்பிரித்து ஒவ்வொரு வருடமும் பல்வேறு புராணங்கள்/கதைகள்/ தொன்மை மரபுகள் இப்பண்டிகையின் மீது ஏற்றி கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முதலில் பல்வேறு சமய தொடர்புகளுடனும் பின் பிராந்திய மரபுகளுடனும் அதன் நாள் கணக்கீட்டு முறைகளுடனும் புரிந்து கொள்வதோடு அவையனைத்தும் ஒரு புள்ளியில் அடங்கிய சில ஆண்டுகால இந்திய அரசியல் வரலாற்றையும் இணைத்து பார்ப்பது காலத்தின் தேவையாக கருதுகிறேன். முதலில் தீபாவளி குறித்த தகவல்கள் […]

Continue Reading...

வரலாற்றின் அடிப்படையில் திராவிடர்கள் யார்?

சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே தமிழகத்தில் ஆரியர் – திராவிடர் எனும் இரண்டு இனவாதங்களை முன்வைத்தே அரசியலும் கொள்கை கோட்பாடுகளும் இயற்றப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரை சமகால அரசியல் – சித்தாந்தம் – கொள்கை – கோட்பாடுகள் போன்றவற்றை கடந்து வரலாற்று ரீதியாக திராவிடர் எனும் சொல்லாடல் பயின்று வரும் இடங்களையும், அவை யாரை குறித்து சுட்டப்பட்டது என்பதையும் முடிந்தளவு விரிவாக அலச முயற்சித்திருக்கிறது. பொது ஆண்டுக்கு முன் (கிமு 2 ஆம் நூற்றாண்டில்) கலிங்கம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஒரிசாவை […]

Continue Reading...

சைவத்திற்கு எது சிறப்பு? வடமொழியா-தென்தமிழா? ஓர் ஒப்பாய்வு!

பொதுவாக சாதிகளில் எது உயர்ந்தது? மொழிகளில் எது சிறந்தது? இனங்களில் எது மேன்மையானது? எனும் ஆய்வுகளுக்கு எல்லாம் செல்ல விரும்பாதவன் நான். அதேசமயம் தாய்மொழி பற்று என்பதை தாண்டி பிற மொழிகளையும் வெறுத்து ஒதுக்காமல் அவற்றையும் மதித்து வருபவன் என்பதால் தான் எனது புனைப்பெயராக ‘அத்யந்தகாமன்‘ எனும் வடமொழி பெயரை சூட்டியிருக்கிறேன். ஆனால் கடந்த சில நூற்றாண்டிற்கு முன்பிருந்து தமிழகத்தில் வடமொழி மோகம் அதிகரித்து விட்டதாக தெரிகிறது. ஏனெனில் சைவ சமயாச்சாரியார்களான மூவர் முதலிகள் போற்றிப்பாடிய பதிகங்களில் […]

Continue Reading...

கல்வெட்டில் தேவாரம்

தமிழகத்தில் பக்தி இலக்கியம் தோன்றின காலமானது (கிபி 5-6-7 ஆம் நூற்றாண்டு) தமிழ் வரலாற்றின் பொற்காலம் என்றே சொல்லலாம். அவைதீக மதங்களான பௌத்த சமண சமயங்கள் வடஇந்தியாவில் இருந்து தென்னகம் புகுந்த காலமது. தமிழ் இலக்கியங்களில் முக்கியமானவை ஐம்பெரும் காப்பியங்கள் என்பதிலும், அவை அவைதீக சமயங்களால் எழுதப்பட்டவை என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சிலப்பதிகாரம் தவிர்த்து மற்ற நான்கும் முறையே சமண – பௌத்த சமயங்கள் தங்களுக்குள்ளாகவும் பிற சமயங்களுடனும் வாதிட்டு வீழ்த்திய வரலாறுகளையே இக்காப்பியங்கள் மூலம் பதிவு […]

Continue Reading...

விநாயகர் – வரலாறும் அரசியலும்!

இந்திய அளவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயக சதுர்த்தி. சிவனின் மகனாக அறியப்படும் மூத்த பிள்ளையாரின் வரலாறானது இந்தியா மட்டுமல்லாது தென்கிழக்காசிய நாடுகளிலும் பிரசித்தி பெற்ற ஒன்று. குறிப்பாக இந்தோனேசியா, ஜாவா, தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை காணலாம். கணங்களின் பதியாக வேதத்திலும், சிவனின் மகனாக சைவத்திலும், அவலோகிதரின் வடிவமாக பௌத்தத்திலும், இடர் தீர்க்கும் தெய்வமாக ஜைனத்திலும் வருகிறார் கரிமுக கடவுளான விநாயகர். இக்கட்டுரை விநாயகரின் வரலாற்றையும் அரசியலையும் தனித்தனியாக தெளிவுபடுத்த […]

Continue Reading...

கிருஷ்ணனின் கதை!

துவாரகை கிருஷ்ணன், கோகுலத்தில் கண்ணன், புல்லாங்குழல் ஊதி ஆயர் குல பெண்களின் மனதை கொள்ளைக்கொண்ட மாயவன், அரக்கனின் வாயை கிழித்த மாயோன் என இந்திய மக்களின் புராண தொன்மமாகவும் தசாவதாரத்தில் ஒன்றாகவும் விளங்கும் கிருஷ்ணனின் வரலாற்றை இக்கட்டுரையில் சற்று விரிவாக காண்போம். ஆப்கானிஸ்தானின் Ai-Khanoum என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் கிமு 2ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க நாணயங்கள் சில கிடைத்தன. Antialcidas எனும் கிரேக்க மன்னனின் காலத்தியதாக அந்த நாணயங்கள் அறியப்பட்டன. வாசுதேவன் ,கிருஷ்ணன், புத்தன் […]

Continue Reading...
error: Content is protected from copying. You can contact the author for content.